திரிணாமுல் காங். கட்சியின் வங்கி கணக்குகளை இயக்க அனுமதி கோரிய மம்தா பானர்ஜி மனு தள்ளுபடி

₹804 கோடி உள்ள முடக்கப்பட்ட 4 வங்கி கணக்குகளை இயக்க அனுமதிக்க கோரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மம்தா பானர்ஜி
Published on: 

மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் பெரும் பிளவை சந்தித்து உள்ளது. நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபையில் கட்சியினர் இரு பிரிவாக பிரிந்துள்ளனர். உள்கட்சி பூசல் வெடித் துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசின் நிதியை கையாளுவதில் போட்டி ஏற் பட்டது. கட்சியின் பெயரில் தனியார் வங்கியில் 4 கணக்குகளில் ₹804 கோடி உள்ளது. இந்த கணக்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்தனர். அதன்படி எதிர்க்கட்சி தலைவர் ரிதபிரத பானர்ஜி தலைமையில் 10 எம்.எல்.ஏ.க்கள் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்த பணம் எங்கிருந்து வந்தது? எனவும், அதன் பரிமாற்றங்கள் குறித்தும் விசா ரணை நடத்துமாறு அதில் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த புகாரின் பேரில் 3 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேல்முறையீடு

இதனை தொடர்ந்து 4 வங்கி கணக்குகளை இயக்க அனுமதி அளிக்குமாறு மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவு கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் வங்கி கணக்குகளை இயக்க அனுமதிக்க கோரி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் மறுத்துவிட் டது.

இந்த உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது.

மாதம் ₹12.15 கோடி தேவை

அப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்காக ஆஜரான மூத்த வக் கீல் அபிஷேக் சிங்வி, “ஒரு கட்சிக்கு எதிராக இருப்பதாலும், அதன் அரசியல் நடவடிக்கைகளை தடுக்க விரும்புவதாலும் மாநில போலீஸ் வங்கி கணக்கு களை முடக்கியுள்ளது. கட்சியின் செயல்பாடுகள் மற்றும் செலவுகளை சமா ளிக்க மாதத்திற்கு குறைந்தபட்சம் ₹12.15 கோடி தேவைப்படுகிறது" என்று வாதிட்டார். இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "கட்சியில் ஒரு பிரிவுதான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று உரிமை கோரும் வகை யிலான உள்கட்சி மோதல் நிலவுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான பிரி வின் தனிப்பட்ட உதவியாளர் ஒருவர், அந்த வங்கி கணக்குகளில் 235 கோடியை ரொக்கமாக எடுத்தாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர் பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என கூறினார்.

யாருக்கு உரிமை உண்டு?

இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு "கட்சி சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக் கியுள்ளது. எனவே அந்த தொகையை பெறுவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பது குறித்த முக்கிய விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள் ளது. எனவே கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை" என கூறி மம்தா பானர்ஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com