நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: ம‌ம்தா பானர்ஜி கோரிக்கை

நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

மத்திய அரசால் 'பராக்ரம் திவாஸ்' (வீரம் நாள்) என அறிவிக்கப்பட்ட நேதாஜியின் ஆண்டு விழாவைச் சேர்க்கும் வகையில் ஜனவரி 23 முதல் குடியரசு தின விழாவைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம், ஒட்டுமொத்த தேசமும் தேசிய தலைவருக்கு மரியாதை செலுத்தவும், தேக் நாயக் திபாசை (DeshNayakDibas) மிகவும் பொருத்தமான முறையில் கொண்டாடவும் அனுமதிக்க வேண்டும்.

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் நேதாஜி பற்றிய அட்டவணை காட்சிப்படுத்தப்படும், மேலும் நமது நாட்டின் 75 வது சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் வங்காளத்தைச் சேர்ந்த மற்ற தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களும் இடம்பெறுவார்கள்.

தேஷ்நாயக் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை. தேசிய மற்றும் உலகளாவிய அடையாளமான, வங்காளத்திலிருந்து நேதாஜியின் எழுச்சி இந்திய வரலாற்றின் வரலாற்றில் நிகரற்றது என்று அதில் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com