திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்

இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்
Published on

புனே,

மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் அவிராஜ் காரத் (22). இவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அவிராஜின் கோரிக்கையை அந்த இளம்பெண் ஏற்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவிராஜ், இளம்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவிராஜை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில், சதாரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த அவிராஜை போலீசார் கைதுசெய்தனர். தற்போது போலீஸ் காவலில் உள்ள அவிராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com