ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் கைது

ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் கைது
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு சாலையோர ஓட்டலில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவுதும் அதை சமைப்பதும் போல வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஓட்டல் சமையல்காரர் தமீசுதீன் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமீசுதின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமீசுதின் ஜாமீனில் நேற்று வெளியே வந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com