திருட்டு வழக்கில் தப்பி போலி சாமியாராக வலம் வந்த நபர் 40 ஆண்டுகளுக்கு பின் கைது

போலீசார் நம்மை நெருங்க முடியாது என நினைத்திருந்த சமயத்தில், அவரது முகநூல் ஐ.டி. மூலம் போலீசில் சிக்கியுள்ளார்.

திருட்டு வழக்கில் தப்பி போலி சாமியாராக வலம் வந்த நபர் 40 ஆண்டுகளுக்கு பின் கைது
Published on: 

கான்பூர்

திருட்டு வழக்கில் தப்பி போலி சாமியாராக வலம் வந்த நபர் 40 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கன்னோஜ் பகுதியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ். 1986-ம் ஆண்டில் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளுக்காக பசல்கஞ்ச் காவல் நிலைய போலீசாரால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் பெற்ற அவர், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

100 கி.மீ. தொலைவில் உள்ள பரேலி பகுதிக்கு தப்பி சென்ற அவர் போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க ஒரு யோசனை செய்துள்ளார். சாமியார் வேடம் அணிந்து ஆசிரமம் ஒன்றை அமைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். இதனால், அவரை அடையாளம் காண முடியவில்லை.

முகநூல் ஐ.டி.

போலீசார் நம்மை நெருங்க முடியாது என நினைத்திருந்த சமயத்தில், அவரது முகநூல் ஐ.டி. மூலம் போலீசில் சிக்கியுள்ளார். முகநூலில் இருந்த சாமியாரின் நண்பர் பட்டியலின் வழியே அவரை பற்றிய தகவல் கான்பூர் நகரின் பசல்கஞ்ச் காவல் நிலைய போலீசாருக்கு சென்றது.

இதனை தொடர்ந்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, பரேலியில் உள்ள ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஆசிரமத்தில் இருந்த சாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், திருட்டு வழக்கில் தப்பி போலி சாமியாராக வலம் வந்த நபர் 40 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com