வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
Published on

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டலம் சாம ராஜுபள்ளியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா. இவர் தனது வீட்டின் அருகில் கஞ்சா வளர்த்து, அதை விற்பனை செய்து வருவதாக கங்காவரம் போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதன்பேரில் கங்காவரம் நகர போலீசார், தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சாமராஜுப்பள்ளியில் உள்ள ஹரிகிருஷ்ணாவின் வீட்டில் சுமார் 1 கிலோ கஞ்சா மற்றும் சில கஞ்சா செடிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணாவை கைது செய்தனர். இந்த தொழிலில் கூட்டாளியாக உள்ள கேசவுலு என்பவர் தலைமறைவானதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com