ஓடும் ரெயிலில் மாணவிகள் முன் ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் கைது

கேரளாவில் ஓடும் ரெயிலில் ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை வீடியோவாக பதிவு செய்து காவல்துறையில் மாணவிகள் புகார் அளித்தனர்.
ஓடும் ரெயிலில் மாணவிகள் முன் ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் கைது
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் அவரது பக்கத்தில் மாணவிகள் இருந்த சூழலில், தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அவரது செயலை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் காவல்துறையில் அந்த நபர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, மாணவிகள் அளித்த புகாரின் பெயரில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com