சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது

மகாராஷ்டிராவில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது
Published on

நாக்பூர்,

மகாராஷ்டிராவின் நாக்பூரில் மவுடா கிராமத்தில் வசித்து வருபவர் இந்தல் தோம்பிரி (வயது 52). இவரது மருமகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் தனது மாமனாரை அழைத்து கொண்டு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

இதன்பின் திரும்பி வந்தபொழுது பண்ணை வீடு ஒன்றில் வைத்து மருமகளை தோம்பிரி கற்பழித்து விட்டார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் கற்பழிப்பு முயற்சியில் அவர் ஈடுபட்டு உள்ளார். ஆனால், அவரிடம் இருந்து தப்பிய மருமகள் தனது கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

இதுபற்றி மவுடா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தோம்பிரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com