30 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து பணம் பறித்த நபர் கைது

இஸ்ரோவில் வேலை வாங்கி தர முடியும் என்று ஈரண்ணா படிகர் கூறியுள்ளார்.
30 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து பணம் பறித்த நபர் கைது
Published on

பெங்களூரு,

இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் ஈரண்ணா படிகர். இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி தான் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் வேலை செய்வதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இஸ்ரோவில் வேலை வேண்டும் என்றால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்து இருந்தார். இதனை பார்த்த கதக், விஜயாப்புரா உள்பட ஏராளமான மாவட்டங்களைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள், ஈரண்ணா படிகருக்கு குறுஞ்செய்தி அனுப்பினர். அவர்களுக்கு பதிலளித்த ஈரண்ணா படிகர், தான் நினைத்தால் கண்டிப்பாக இஸ்ரோவில் வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார்.

பெண்களுடன் உல்லாசம்

அதற்காக வாலிபர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை அவர் போன்-பே செயலி மூலம் வசூலித்தார். அதுபோல் 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் பணம் பெற்றது மட்டு மல்லாமல் அவர்களை தன் வலையில் வீழ்த்தி உல்லாசமும் அனுபவித்துள்ளார். இந்தநிலையில் பணம் கொடுத்த வாலிபர்கள், பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தராததால் ஈரண்ணா படிகரிடம் அதுபற்றி கேட்டுள்ளனர்.

அவர்கள் நெருக்கடி கொடுத்ததால் ஈரண்ணா படிகர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை அழித்துவிட்டு, செல்போன் எண்ணையும் மாற்றி விட்டார். அப்போது தான் தங்களை ஈரண்ணா படிகர் ஏமாற்றி பணம் பறித்ததை வாலிபர்களும், இளம்பெண்களும் உணர்ந்தனர். மேலும் இதுபற்றி கதக் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

கைது

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஈரண்ணாவை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் ஈரண்ணாவை விஜயாப்புராவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய் தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு நபர்களிடம் இருந்து கடன் வாங்கி இருந்ததும், அதை திரும்ப அடைக்க வேண்டி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் ஆபாச படமும் இருந்தது தெரியவந்தது. அவருடைய வீட்டில் இருந்து ஏராளமான ஆணுறைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீ சார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com