வீட்டுக்குள் புகுந்து சுட்டு கொன்று விடுவேன்; ராகுல் காந்தியை மிரட்டிய நபர் கைது

எம்.பி.க்களின் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடி விடுவோம் என மிரட்டல் விடும் வகையில் பேசினார்.

வீட்டுக்குள் புகுந்து சுட்டு கொன்று விடுவேன்; ராகுல் காந்தியை மிரட்டிய நபர் கைது
Published on

கோட்டா

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியையும் மற்றும் எம்.பி.க்கள் 25 பேரையும் சுட்டு கொலை செய்து விடுவேன் என வீடியோ வெளியிட்டு நபர் ஒருவர் மிரட்டியுள்ளார்.

கர்னி சேனா என்ற வலதுசாரி அமைப்பின் செய்தி தொடர்பாளரான ராஜ் சிங் என்ற அந்த நபரை ராஜஸ்தானின் கோட்டா நகரில் வைத்து போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் வீடியோவில், சமீபத்தில் நிறைவடைந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியில் மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லாவை தகாத முறையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேசினர்.

Also Read
ஏ.ஐ.-யின் வெற்றி இதில் உள்ளது... புத்தரின் போதனைகளை குறிப்பிட்ட பிரதமர் மோடி

வீட்டுக்குள் புகுந்து சுட்டு கொன்று விடுவேன்; ராகுல் காந்தியை மிரட்டிய நபர் கைது

அந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் மீதும் பா.ஜ.க.வினரும் மற்றும் கர்னி சேனா தொண்டர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றால், அந்த எம்.பி.க்களின் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடி விடுவோம் என மிரட்டல் விடும் வகையில் பேசினார்.

அவர் தொடர்ந்து, ராகுல் காந்தி உத்தரவின் பேரிலேயே இது நடந்திருக்கும் என நான் நம்புகிறேன். அதனால் ராகுல் காந்தி நன்றாக கவனித்து கொள்ள வேண்டும். இந்த சம்பவம் மீண்டும் நடைபெற்றால், உங்களுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, உங்களை சுட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com