மத்தியபிரதேசத்தில் நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து தெரிவித்த நபர் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!

பாதிக்கப்பட்டவர் காலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சிலரால் தாக்கப்பட்டார்.
மத்தியபிரதேசத்தில் நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து தெரிவித்த நபர் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!
Published on

போபால்,

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து தெரிவித்த ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் நேற்று ஆயுஷ் ஜாதம்(25) என்ற நபரை தாக்கியதாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர் காலையில் மோட்டார் சைக்கிளில் உள்ளூர் சுங்கச்சாவடி வழியாகச் சென்றபோது சிலரால் தாக்கப்பட்டார். அவர்கள் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கியதில் அந்த நபர் படுகாயமடைந்தார். உடனே அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி சில வலதுசாரி அமைப்புகளின் ஆர்வலர்கள் எஸ்.பி அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com