திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணின் தந்தை கொலை; முன்னாள் காதலன் வெறிச்செயல்

திருமண வீடு மரணம் வீடாக மாறியது உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணின் தந்தை கொலை; முன்னாள் காதலன் வெறிச்செயல்
Published on

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் வர்க்கலாபகுதியைச் சேர்ந்தவர் ராஜு (61). இவruடைய மகள் ஸ்ரீ லட்சுமி. ஸ்ரீ லட்சுமிக்கு இன்று காலை திருமணம் நடைபெற நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.

இதே பகுதியில் வசிப்பவர்கள் ஜிஷ்ணு, ஜிஜின், சியான் மற்றும் மனு. இவர்கள் நான்கு பேரும் நேற்று இரவு 12 மணி அளவில் திருமண வீட்டுக்கு வந்தார்கள். அப்போது ராஜூ மற்றும் உறவினர்கள் திருமண வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

காரில் வந்த நாலு பேரும் காரில் அதிக அளவு சத்தம் வைத்து பாட்டை வைத்தார்கள். மணப்பெண் ஸ்ரீலட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மற்ற பெண்களையும் தாக்கி உள்ளனர். இதை தட்டி கேட்பதற்காக தந்தை ராஜு மற்றும் உறவினர்கள் வந்தார்கள்.

அப்போது ராஜூவுக்கும் நான்கு வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நான்கு வாலிபர்களும் அருகில் கிடைந்த பயங்கர இரும்பு ஆயுதங்களை எடுத்து ஸ்ரீ லட்சுமியின் தந்தை ராஜு மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்து ரத்த வெள்ளத்தில் கீழே விழ செய்தார்கள். பின் அங்கிருந்து நான்கு பேரும் தப்பி ஓடி விட்டனர்.

அருகில் இருந்தவர்கள் ராஜுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அங்கு அவர் பரிதாபமாக இறந்து போனார். விவரம் தெரிந்த வர்க்கலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு மறைந்திருந்த நான்கு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

திருமணம் நடைபெற உள்ள ஸ்ரீ லட்சுமி ஏற்கனவே ஜிஷ்ணுவை காதலித்து உள்ளார். இப்போது அவரை மறந்து விட்டு வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து உள்ளார். இதில் கோபம் அடைந்த ஜிஸ்ணு தனது நண்பர்களுடன் திருமணம் வீட்டுக்கு வந்து மணமகளை தாக்க முயன்றார்கள்.

அப்போது மணமகளின் தந்தையை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

போலீசார் நாலு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்திவருகிறார்கள். திருமண வீடு மரணம் வீடாக மாறியது உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com