மனைவியின் படுக்கை அறையில் கேமிரா வைத்து உளவு வேலையில் ஈடுபட்ட கணவர் மீது வழக்கு பதிவு

மனைவியின் படுக்கை அறையில் கேமிரா வைத்து உளவு வேலையில் ஈடுபட்ட கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #SpyCamera
மனைவியின் படுக்கை அறையில் கேமிரா வைத்து உளவு வேலையில் ஈடுபட்ட கணவர் மீது வழக்கு பதிவு
Published on

புனே,

மகாராஷ்டிராவின் புனே நகரில் காலேபடல் நகரில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். 20 வருடங்களுக்கு முன் இவரது திருமணம் நடந்தது. இவருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் கணவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்று உள்ளார்.

அதன்பின் 10 வருடங்கள் கழிந்து இந்தியா திரும்பியுள்ளார். இந்த தம்பதி 8 மாதங்கள் ஒன்றாக வசித்து வந்தனர். ஆனால் சேர்ந்து வாழ விருப்பமின்றி பெங்களூருவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு கணவர் சென்று விட்டார்.

எனினும் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் மகனை காண்பதற்காக அடிக்கடி புனேவுக்கு சென்றுள்ளார். அப்படி சென்றதில் ஒரு முறை மனைவியின் படுக்கை அறையில் இருந்த நீர் தூய்மைப்படுத்தும் இயந்திரத்தில் உளவு கேமிரா ஒன்றை ரகசியம் ஆக வைத்துள்ளார்.

அந்த கேமிராவை அவரது மனைவி இந்த வருடம் ஜனவரியில் கண்டுபிடித்துள்ளார். அதன்பின்பு கேமிரா கொண்டு உளவு வேலையில் ஈடுபட்டது பற்றி கணவர் மீது சில மாதங்கள் கழித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி துணை ஆய்வாளர் ரேகா காலே கூறும்பொழுது, பெங்களூருவில் இருந்து புனே நகருக்கு அந்நபர் வரும்பொழுது அவரிடம் நாங்கள் பேசுவோம். அதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com