திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த நபர் - அதிர்ச்சி சம்பவம்


திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
x

திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநில மீரட் மாவடம் பிரமபுரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 21ம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையிலான உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்து பரிமாறப்பட்டது.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த இளைஞரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விவரம் வெளியிடப்படவில்லை.



1 More update

Next Story