ரெயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபர்; அடுத்து நடந்த சம்பவம்

ரெயில் அருகே வந்ததும் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியது.
ரெயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபர்; அடுத்து நடந்த சம்பவம்
Published on

புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் பரபரப்பாக செயல்படும் சிவாஜி ரெயில் நிலையத்தில் தண்டவாளம் ஒன்றில் நபர் ஒருவர் வெள்ளை நிறத்தில் விரிப்பை விரித்து குறுக்கே படுத்து கிடந்துள்ளார்.

அந்த சமயத்தில் ரெயில் ஒன்று நிலையத்திற்கு அந்த வழியே வந்துள்ளது. இதனை பார்த்த நடைமேடையில் இருந்தவர்கள் கூச்சல் போட்டு அவரை எழுந்து போக கூறி சத்தம் போட்டனர்.

Also Read
கர்நாடகா: 5-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ரெயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபர்; அடுத்து நடந்த சம்பவம்

ஆனால், அந்த நபர் எதனையும் கண்டு கொள்ளவில்லை. அவர், குடிபோதையில் இருந்ததுபோன்று கிடந்துள்ளார். அந்த ரெயில் அருகே வந்ததும் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியது.

அப்போதும் அந்த நபர் எழுந்திருக்கவில்லை. எனினும், ரெயில் மெதுவாக வந்து சற்று தூரத்திலேயே நின்று விட்டது. இதனால் பெரிய துர்சம்பவம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com