75 வயது பாட்டியை கற்பழித்து கொன்ற 25 வயது வாலிபருக்கு மரண தண்டனை

75 வயது பாட்டியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
75 வயது பாட்டியை கற்பழித்து கொன்ற 25 வயது வாலிபருக்கு மரண தண்டனை
Published on

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் நகரில் 75 வயது முதிர்ந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 21ந்தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை அக்பர் கான் (வயது 25) என்பவர் கற்பழிக்க முயன்றுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை கான் படுகாயமேற்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டான். இதன்பின்னர் பிப்ரவரி 28ந்தேதி அந்த பெண் மரணமடைந்து விட்டார்.

இந்த வழக்கில் சாட்சியங்கள் இல்லாத நிலையில் இதனை நிரூபிக்க அரசு தரப்பு திணறி வந்தது. ஆனால் குற்றவாளி அணிந்திருந்த உடையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், பெண்ணின் உடலில் இருந்த மாதிரிகளுடன் ஒத்து போயிருந்தன.

இதுபோன்ற அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் கான் கைது செய்யப்பட்டார். கற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மீது நடந்த விசாரணையில் கானுக்கு மரண தண்டனையும் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com