ஐபிஎஸ் அதிகாரிபோல் நடித்து இளம்பெண்ணை திருமணம் செய்த நபர் ; அதிர்ச்சி சம்பவம்

2 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்த்து வந்தார்.
ஐபிஎஸ் அதிகாரிபோல் நடித்து இளம்பெண்ணை திருமணம் செய்த நபர் ; அதிர்ச்சி சம்பவம்
Published on

இந்தூர்,

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்சத் கொதரி. இவர் ஐபிஎஸ் அதிகாரிபோல் நடித்தி இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதை நம்பிய இளம்பெண் சமூகவலைதளம் மூலம் அக்சத் கொதரியுடன் பழகியுள்ளார். பின்னர், கடந்த 2024ம் ஆண்டு அந்த பெண்ணுக்கும் அக்சத்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, திருமணத்திற்குப்பின் அக்சத் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்பதும் அவர் ஏமாற்றி திருமணம் செய்ததையும் அறிந்த இளம்பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அக்சத் தலைமறைவானார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்த்து வந்தார்.

இந்நிலையில், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அக்சத்தை போலீசார் இன்று கைது செய்தனர். மத்தியபிரதேசத்தின் இந்தூரில் பதுங்கி இருந்த அக்சத்தை பன்ஸ்வாரா மாவட்ட போலீசார் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அக்சத்திடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. அக்சத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com