சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது...அதிர்ச்சி சம்பவம்


சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது...அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 28 Feb 2025 10:58 AM IST (Updated: 28 Feb 2025 2:00 PM IST)
t-max-icont-min-icon

சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

பால்கர்,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தனது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து, மனைவியை சித்திரவதை செய்ததாக 56 வயது நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூத்த இன்ஸ்பெக்டர் அவிராஜ் குர்ஹாடே கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் சோட்டா ராஜன் கும்பலுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் தனது இரண்டு மகள்களை 2018 முதல் பிப்ரவரி 2025 வரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களில் ஒருவரை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் அவர் தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்துள்ளார். மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரில், பால்கர், கர்ஜத், கன்கவ்லி மற்றும் சியோன் ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.

1 More update

Next Story