ரூ.47¼ கோடி ஜி.எஸ்.டி. மோசடி மராட்டிய தொழில் அதிபர் கைது


ரூ.47¼ கோடி ஜி.எஸ்.டி. மோசடி மராட்டிய தொழில் அதிபர் கைது
x

விவேக் ராஜேஷ் மவுரியாவின் வீட்டில் மத்திய கலால் துறையின் கீழ் உள்ள தானே வரி ஏய்ப்பு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் தொழில் அதிபர் விவேக் ராஜேஷ் மவுரியால் நடத்தப்படும் நிறுவனம் எந்தவொரு சரக்குகள் வினியோகத்திலும் ஈடுபடாமல் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பில் (ஜி.எஸ்.டி.) போலி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து விவேக் ராஜேஷ் மவுரியாவின் வீட்டில் மத்திய கலால் துறையின் கீழ் உள்ள தானே வரி ஏய்ப்பு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவரின் வங்கி கணக்கு புத்தகங்கள், செக் புத்தகங்கள், மொபைல் போன்கள் மற்றும் பல மோசடி நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அவர் ரூ.47¼ கோடி மதிப்புள்ள கடன் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து விவேக் ராஜேஷ் மவுரி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story