கேரளா: ரூ. 25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ரதேஷ்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞைரிடமிருந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோடி பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் வழக்கமான ரோந்து,வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஸ்கூட்டரில் வந்த இளைஞரை இடைமறித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் அரோர் பகுதியை சேர்ந்த ரதேஷ் என்பதும் அவர் ஸ்கூட்டரில் போதைப்பொருள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இளைஞர் கைது

இதையடுத்து, ரதேசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 780 கிராம் உயர் ரக போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ. 25 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருளை சப்ளை செய்தது யார்? இந்த போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து ரதேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com