கோழிக்கோடு கடற்கரையில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது


கோழிக்கோடு கடற்கரையில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது
x

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பிரபலமான கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், கோழிக்கோடு கடற்கரையில் உள்ள சாலையில் ஒரு நபர் கஞ்சாவுடன் உறங்கிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், முகமது ரபிக் (வயது 39) என்ற நபரை கைது செ ய்தனர். அவரிடமிருந்து 300 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story