

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த நபரை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் பெயர் சச்சின் குமார் என்றும், அவர் சேஹர் சவ்சேரா பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நபரிடம் இருந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.