

ராய்ப்பூர்,
சட்டீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரை சேர்ந்த விவசாயி சந்து மவுரியா என்பவர் சத்தாரி மற்றும் ஹசீனா என்ற இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தாரிக்கும் சந்து மவுரியா ஆகிய இருவரும் செல்போன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர், இதனிடையே சந்து மவுரியா உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது ஹசீனா என்ற பெண்ணை சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்த மூவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பு ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒன்றாக வாழவும் ஒப்புக்கொண்டனர். இதனால் இவர்கள் மூவருக்கும் ஜனவரி 3-ஆம் தேதி திருமணம் நடந்தது. இப்போது அவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதலில் சந்து, சத்தாரியை காதலித்து ஒன்றாக வாழ முடிவு செய்தார். சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் ஹசீனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். மூவரும் ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்தனர். இந்த திருமணத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மூவரும் தொடர்ந்து விவசாயிகளாக இணைந்து பணியாற்றி மகிழ்ச்சியுடன் வாழவும் முடிவு செய்துள்ளனதாக தெரிவித்தனர்.