விமானத்தில் குலாப் ஜாமுன் கொண்டு செல்ல தடை விதித்த அதிகாரிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்தியர்- வைரல் வீடியோ

இந்திய விமான பயணியின் செயல் தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விமானத்தில் குலாப் ஜாமுன் கொண்டு செல்ல தடை விதித்த அதிகாரிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்தியர்- வைரல் வீடியோ
Published on

பூகெட்,

இந்தியாவை சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் என்பவர் விமான பயணத்துக்காக தாய்லாந்து விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள பூகெட் விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான சோதனையின் ஒரு பகுதியாக ஹிமான்ஷு-வின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஹிமான்ஷு வைத்திருந்த குலாப் ஜாமுனை விமானத்தில் எடுத்து செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர். இதை கேட்ட ஹிமான்ஷு தேவ்கன் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னிடம் இருந்த குலாப் ஜாமுனை அதிகாரிகளுடன் பகிர்ந்து கெள்ள விரும்பினார்.

இதையடுத்து அவர் விமான நிலையத்தில் அனைத்து அதிகாரிகளுக்கும் குலாப் ஜாமுனை வழங்கினார். அதனை மகிழ்ச்சியாக அதிகாரிகள் சுவைத்து மகிழ்ந்தனர். அவரின் இந்த செயல் அதிகாரிகள் உட்பட அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை ஹிமான்ஷு தேவ்கன் வீடியேவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாதுகாப்பு தெடர்பான சேதனையின்பேது அதிகாரிகள் குலாப் ஜாமுனை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் நாங்கள் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கெள்ள முடிவு செய்தேம்'' என கூறியுள்ளார்.

View this post on Instagram

அவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு பாராட்டையும் பெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com