நடத்தையில் சந்தேகம்; மனைவி மீது ஆசிட் வீசிய கணவன் - அதிர்ச்சி சம்பவம்

ஆசிட் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ராம்கோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகம்; மனைவி மீது ஆசிட் வீசிய கணவன் - அதிர்ச்சி சம்பவம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் நிஹொகி பகுதியை சேர்ந்தவர் ராம் கோபால். இவரது மனைவி ராம்கோனி (வயது 39). இந்த தம்பதிக்கு ரசிதா (வயது 23), நேஹா (வயது 16) அஷு என்ற மகனும் உள்ளனர்.

இதனிடையே, மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராம் கோபால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராம்கோனி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகள்களுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த ராம் கோபால் மனைவி மீது ஆசிட்டை வீசினார். இது ராம்கோனி மற்றும் அவரின் மகள்கள் மீது விழுந்தது. இதில் 3 பேரும் காயமடைந்தனர்.

இதையடுத்து, 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர், 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், நேஹாவுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிட் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ராம்கோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com