சிபிஐ சிறப்பு இயக்குநருக்கு எதிராக ஊழல் புகார் கொடுத்தவர் பாதுகாப்பு கேட்டு மனு

சிபிஐ சிறப்பு இயக்குநருக்கு எதிராக ஊழல் புகார் கொடுத்த தொழிலதிபர் பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐ சிறப்பு இயக்குநருக்கு எதிராக ஊழல் புகார் கொடுத்தவர் பாதுகாப்பு கேட்டு மனு
Published on

புதுடெல்லி,

சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக லஞ்ச புகார் கொடுத்த ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா , பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளார். விசாரணைக்காக ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இடைக்கால பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் சதீஷ் சனா மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, சிபிஐ வழக்கில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, அஸ்தானாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், டிசம்பர் 2017-லிருந்து 10 தவணையாக லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டது எனவும் சதீஷ் சனா தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தான் அஸ்தானா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com