பரோலில் வெளியே வந்து தப்பியோடிய நபர் - 14 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசில் சிக்கினார்

பரோலில் வெளியே வந்து 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பரோலில் வெளியே வந்து தப்பியோடிய நபர் - 14 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசில் சிக்கினார்
Published on

பெங்களூரு,

பெங்களூரு மடிவாளா அருகே வசித்து வருபவர் கருணாகர் (வயது 48). இவர், கடந்த 1998-ம் ஆண்டு பேடராயனபுராவை சேர்ந்த சஞ்சீவ் என்பவரை கொலை செய்திருந்தார். இதுதொடர்பாக பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரை கைது செய்திருந்தாகள். இந்த கொலை வழக்கில் கருணாகருக்கு, கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி இருந்தது. இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில் கருணாகர் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு தனது தாய்க்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி சிறையில் இருந்து பரோலில் கருணாகர் வெளியே வந்திருந்தார்.

ஆனால் பரோல் நாட்கள் முடிந்த பின்பு அவர் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படி கோர்ட்டும் உத்தரவிட்டு இருந்தது. இதனால் கருணாகரை போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில், ஹாவேரி மாவட்டம் ஹனகல் அருகே உள்ள கிராமத்தில் தங்கி இருந்து கருணாகர் ஓட்டல் நடத்தி வருவது பற்றி மடிவாளா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார், கருணாகரை கைது செய்தார்கள். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தார்கள். பரோலில் வந்த கருணாகர் 14 ஆண்டுக்கு பின் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com