

புதுடெல்லி,
டெல்லி ஷாஹீன் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட கபில் பைசலா ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவரும், அவரது தந்தையும் 2019-ம் ஆண்டு அந்த கட்சியில் சேர்ந்தனர். அவரது செல்போனை கைப்பற்றி அதில் இருந்து அவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததற்கான புகைப்படம் மற்றும் தகவல்களை சேகரித்துள்ளோம் என்று போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் தியோ கூறினார்.