பர்தா அணிந்தபடி அலமட்டி அணைக்குள் நுழைய முயன்றவர் கைது

பர்தா அணிந்தபடி அலமட்டி அணைக்குள் நுழைய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
பர்தா அணிந்தபடி அலமட்டி அணைக்குள் நுழைய முயன்றவர் கைது
Published on

விஜயாப்புரா:

கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டத்தில் அலமட்டியில் லால்பகதூர் சாஸ்திரி அணை கட்டு உள்ளது. தற்போது பெய்த கனமழையாலும், கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் இந்த அணை முழுகொள்ளளவை எட்டி நீர்நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பர்தா அணிந்தபடி அணைக்குள் நுழைய முயன்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் பர்தாவுடன் வந்தவரை பிடித்து விசாரித்த போது தான், அவர் வாலிபர் என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த தோள் பையில் லிப்ஸ்டிக், நெயில் பாலீஸ் உள்ளிட்ட பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள் இருந்துள்ளன. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை சேர்ந்த கிஷோர் (வயது 22) என்பதும், இவருக்கு சக்லேஷ்புராவில் 2 பேக்கரி கடைகள் இருப்பதும் தெரியவந்தது. ஆணாக இருந்து பெண்ணாக அவர் மாறியதும், இதை அறியாத அவரது குடும்பத்தினர் திருமணம் செய்துகொள்ளும்படி அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததும், ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத அவர் வீட்டைவிட்டு வெளியேறி பர்தா அணிந்து சுற்றி வந்ததும், அணையை பார்க்க வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com