ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

குடிபோதையில் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து, அசிங்கம் செய்த நபரை விமான பயண தடை பட்டியலில் வைக்க ஏர் இந்தியா நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி
Published on

புதுடெல்லி:

நவம்பர் 26, 2022 அன்று ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்த பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உணவுக்குப் பிறகு கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது அந்த நபர் சிறுநீர் கழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பெண் பயணியின் பை, காலணிகள் மற்றும் உடைகள் சிறுநீரில் நனைந்திருந்தன.

தனக்கு பைஜாமாக்கள் மற்றும் செருப்புகள் வழங்கப்பட்டதாகவும், தனது இருக்கைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பெண் கூறினார்.

பல முதல் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்தபோதிலும், அவர் ஒரு குழு இருக்கையில் பயணிக்க வேண்டியிருந்தது.

தரையிறங்கிய பிறகு அந்த நபரை சுதந்திரமாக நடமாட விமான குழுவினர் அனுமதித்ததாகவும் அந்த பெண் புகார் கூறி உள்லார்.

ஏர் இந்தியா விமானம் ஜேஎப்கே அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் விமான நிறுவனம் ஒரு குழுவை அமைத்து, அந்த பயணி இனி எந்த விமானத்திலும் பயணிக்க முடியாத தடைக்கு பரிந்துரைத்தது.

தற்போது, இந்த விவகாரம் அரசு ஆய்வு குழுவிடம் உள்ளது. குழுவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான நிறுவனத்தால் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, ஏர் இந்தியா என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com