வேறு நபர்களுடன் திருமணம் முடிந்த ஆண் மற்றும் பெண் திருமண முயற்சி தோல்வியால் தற்கொலை

வேறு நபர்களுடன் திருமணம் முடிந்த ஆண் மற்றும் பெண் திட்டமிட்ட திருமண முயற்சியானது தோல்வியில் முடிந்த வருத்தத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
வேறு நபர்களுடன் திருமணம் முடிந்த ஆண் மற்றும் பெண் திருமண முயற்சி தோல்வியால் தற்கொலை
Published on

மகாராஷ்டிராவில் தானே நகரில் உள்ள மல்காவோட்டா பகுதியை சேர்ந்த 32 வயது நிறைந்த ஆண் மற்றும் பெண் இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். இவர்கள் இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணம் முடிந்து விட்டது.

எனினும், திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்ததனை அடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த பெண் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது கணவர் தனது மனைவியை காணவில்லை என உள்ளூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில், ரேடியச்சபடா என்ற கிராமத்தில் வனபகுதி ஒன்றின் அருகே மரம் ஒன்றில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் தற்செயலான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com