வகுப்பறையில் அயோத்தி ராமரை அவமதித்த ஆசிரியை: மாணவ-மாணவிகள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பி போராட்டம்

ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வகுப்பறையில் அயோத்தி ராமரை அவமதித்த ஆசிரியை: மாணவ-மாணவிகள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பி போராட்டம்
Published on

மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஜெப்புநகரில் சயின்ட் ஜோசப் என்ற தனியார் பள்ளி சயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியையாக பிரபா என்பவர் இருந்து வருகிறார். கடந்த 8-ந்தேதி வகுப்பில் பாடம் நடத்தும்போது, ஆசிரியை பிரபா, அயோத்தி கோவில் பற்றியும், ராமர் பற்றியும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதுபற்றி பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இந்த தகவல் இந்து அமைப்பினருக்கு தெரியவந்தது. இதனால், இந்து அமைப்பினா மற்றும் மாணவர்களின் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இருப்பினும் பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று மீண்டும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் என நூற்றுக்கணக்கானோர் பள்ளியின் வாசல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி மாணவ-மாணவிகள் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்பினார்கள்.

மாணவர்களின் மனதில் மதவெறியை விதைக்கும் ஆசிரியை பிரபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, ஆசிரியை பிரபாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com