

போகோரோ
ஜார்கண்ட் மாநிலம் போகாரோவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் அரவிந்த் குமார்,கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
ஆனால் நுரையீரல் தொற்று காரணமாக ஆக்சிஜன் உதவியுடனே சுவாசித்துவந்தார். மேலதிகாரிகள் பணிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்ததால் ஆக்சிஜனுடனே வங்கிக்கு வந்ததாக அரவிந்த்குமார் விளக்கமளித்தார்.
இந்நிலையில் வங்கியையும், வங்கி அதிகாரிகளையும் களங்கப்படுவதற்காக அரவிந்த்குமார் நாடகமாடியதாகவும், துறை ரீதியான விசாரணை நிலுவையில் இருப்பதால், அவரது ராஜினாமாவும் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கமளித்துள்ளது.