

சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ந் தேதியும் நடந்தது. மண்டல, மகர விளக்கு பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தை மாத பூஜை வழிபாடுகள் நடந்து வந்தது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு பந்தளம் ராஜா குடும்ப பிரதிநிதி உத்ரம் திருநாள் பிரதீப்குமார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டு, சாவி உத்ரம் திருநாள் பிரதீப்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.