மணிப்பூரில் மீண்டும் இணையசேவை

மணிப்பூரில் மீண்டும் இணையசேவை வழங்கப்பட உள்ளது.
மணிப்பூரில் மீண்டும் இணையசேவை
Published on

இம்பால்,

மணிப்பூரில் பெரும்பான்மை இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே 3-ந் தேதி கலவரம் வெடித்தது. கலவரம் தொடங்கிய உடனேயே அங்கு இணையசேவை முடக்கப்பட்டது. வன்முறை சம்பவங்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநில அரசு அதற்கான உத்தரவை பிறப்பித்தது. இதனால் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்டவற்றை பெற மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்தநிலையில் சுமார் 3 மாதங்கள் கழித்து மணிப்பூரில் இணையசேவை முடக்கத்தை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மீண்டும் இணையசேவை வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட சில இடங்களில் இதனை நடைமுறைப்படுத்த உள்ளனர். பின்னர் படிப்படியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இணையசேவை வழங்கப்பட கூடும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com