மணிப்பூர்: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; 5 பேர் காயம்

அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மணிப்பூர்:  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; 5 பேர் காயம்
Published on

இம்பால்

மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இம்பால் நகரில் இமா மார்க்கெட் பகுதியில் மக்கள் போராட்டம் இன்று வலுவடைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தினரை கலைந்து போகும்படி கூறினர். ஆனால், அவர்கள் கலையாமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Also Read
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு; 1 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
மணிப்பூர்:  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; 5 பேர் காயம்

போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.எப்.டி. என்ற அமைப்பின் உதவி செயலாளரான நவோரெம் வங்கம்பா கூறும்போது, சட்டவிரோத குடியேறிகளை முறையாக அடையாளம் கண்டு, அதன்பின்னர் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட வேண்டும். இதற்கு 1951-ம் ஆண்டை கணக்கீடாக கொள்ள வேண்டும் என்றார்.

அப்படி சட்டவிரோத குடியேறிகளை தனியாக பிரிக்காமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டால், அவர்கள் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படும் ஆபத்து உள்ளது. இது உண்மை மற்றும் அரசியலமைப்பை மீறுவது ஆகும் என குறிப்பிட்டார். அதனால், தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பை, தள்ளிவைக்கும்படி மத்திய உள்துறை மந்திரியிடம் நினைவூட்டல் கடிதம் ஒன்றை முன்பே கொடுத்திருக்கிறோம் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com