மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகள்: அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகள்: அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாம் மாநிலத்திறகு மாற்றப்பட்டுள்ளது. வழக்கில் நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை:-

மணிப்பூரில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உயிருக்குப் பயந்து ஏராளமானோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இந்த வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இரண்டு பெண்களை ஆடையின்றி மானபங்கம் செய்தபடி ஊருக்குள் இழுத்து வந்தது தொடர்பான வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதையடுத்து மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com