மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

 ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மனிஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.அவரது ஜாமீன் மனுக்கள் கீழமை கோர்ட்டுகளில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டதால் கடந்த 17 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மணிஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மணிஷ் சிசோடியா கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று அமலாக்கத்துறை வைத்த வாதமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com