சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் (மனதின் குரல்) எனும் வானொலி நிகழ்ச்சியின் மூலம்  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

"மக்கள் போதைப் பழக்கங்களை கைவிட்டு உடலைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் . இந்தியா 10 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா, இந்தியாவிடம் திருப்பி வழங்கிய தொன்மையான பொருட்கள் பற்றி சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அவை அனைத்தும் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டவை.

இவை 250 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரை பழமையானது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்ததாகும் .

ஆகஸ்ட் 15 -ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com