

மும்பை,
மத்தியபிரதேச மாநிலம் மும்பையில் பாண்டுப் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு நபரின் செல்போன் பாக்கெட்டில் இருக்கும்போதே வெடித்து சிதறியது.
இந்தச் சம்பவம் ஜூன் 4 ம் தேதி நடந்தது. பின்னர் சி.சி.டிவி கேமரா மூலம் இந்த சம்பவம் கைப்பற்றப்பட்டது.
சி.சி.டிவி காட்சியில், ஒருவர் உணவகத்தில் தனது மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென்று அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறுகிறது. பின்னர் அவர் அவசரமாக தனது சட்டை பையில் இருந்த செல்போனை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். பின்னர் செல்போனை எடுத்து வெளியே வீசுகிறார். இந்த காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகி இருந்தது.
செல்போன் வெடிப்பு காரணமாக அந்த மனிதர் சிறிய தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் உணவகத்தில் இருந்தவர்களிடையே பீதியை உருவாக்கியது.