மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்ற தெலுங்கானாவைச் சேர்ந்த அழகி மானசா..!

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்ற தெலுங்கானாவைச் சேர்ந்த அழகி மானசா..! இரண்டாவது இடத்திறகு உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிக்‌ஷா தொழிலாளியின் மகள் வந்துள்ளார்
படம்: Timesofindia.com/BCCL/Prathamesh Bandekar
படம்: Timesofindia.com/BCCL/Prathamesh Bandekar
Published on

மும்பை

தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார்.டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.

விஎல்சிசி பெமினா நடத்தும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த வகையில் கடந்து ஆண்டிற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

மானசாவை அடுத்து அரியானாவைச் சேர்ந்த மனிகா சிஷோகந்த் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ஆகிய இருவரும் ரன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் எஇக்சா தொழிலாளியின் மகள் ஆவார்.உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநரின் மகள் மன்யாவைப் பொறுத்தவரை, பல தூக்கமில்லாத இரவுகள் மற்றும் பல வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்து உள்ளது.மான்யா தான் எதிர்கொண்ட போராட்டங்களைப் மனந்திறந்தார்.

குஷினகரில் பிறந்த மன்யா தனது பதிவில், அவர் கடினமான சூழ்நிலைகளில் வளர்ந்ததாகவும், உணவு அல்லது தூக்கம் இல்லாமல் இரவுகளை கழித்ததாகவும், ஒரு சில ரூபாயைக் காப்பாற்றுவதற்காக மைல்கள் நடந்து செல்வதாகவும் கூறினார். புத்தகங்கள் மற்றும் ஆடைகளுக்காக தான் ஏங்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டம், தனக்கு ஒருபோதும் சாதகமாக இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

23 வயதான மானசா தெலுங்கானா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டம் பெற்ற மாணவி. அதோடு டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார். மானசா தற்போது நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக ( பணியாற்றி வருகிறார்.

மிஸ் இந்தியா அழகிபோட்டி தேர்வுக் குழுவில் நேகா தூபியா, சித்ரங்காடா சிங் , புல்கிட் சாம்ராட் மற்றும் வடிவமைப்பாளர்கள் ஃபால்குனி மற்ற்ய்ம் ஷேன் பீக்காக் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com