பா.ஜனதா தலைவர் வீட்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்

பீகாரில் பா.ஜனதா தலைவர் வீட்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பா.ஜனதா தலைவர் வீட்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்
Published on

பீகார் மாநிலம் மகாத் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் கயாவில் பா.ஜனதா தலைவர் அனுஜ் குமார் வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுமார் 20-30 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் வந்து அவரது வீட்டில் வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனால் வீடு சேதம் அடைந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற போது அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் நேரிடவில்லை. கிராமப்புற மக்களை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மாவோயிஸ்டுகள், மீறினால் விளைவுகளை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com