

மும்பை
மராட்டியத்தில் மராட்டிய சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு கோரி பந்து அறிவித்து உள்ளனர். தற்போது இந்த பந்த் இன்று கலவரமாக மாறியது. அவுரங்காபாத் மாவட்டத்தில் போலீசாரின் 2 வாகங்களில் தீ வைத்து கொளுத்தினர். இட ஒதுக்கீடு கோரி ஒருவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் ககாசாஹெப் ஷிண்டே என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
ஆர்ப்பாட்டகாரர்கள் அவுரங்காபாத்தில் போலீசாருடன் மோதினர், இரண்டு தீயணைக்கும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.
கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்க சென்றபோது சிவசேனா எம்.பி. சந்திரகாந்த் கெய்ரின் வாகனத்தை அவுரங்காபாத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் தாக்கினர். ஹிங்கோலி மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். போலீஸ் வாகனத்தை எரித்தனர்.
இதற்கிடையில், மூன்று பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் அவர்கள் தடுக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஜெயந்த் சொனாவனே, குட்டு சொனாவனே இரண்டு பேரும் ஆற்றில் குத்தித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். ஜகன்னத் சொனாவனே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.