மராட்டியம்: ஒரு சில மணிநேர இடைவெளியில் 2 தோழிகள் தற்கொலை

மராட்டியத்தின் புனே நகரில் 2 தோழிகள் ஒரு சில மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மராட்டியம்: ஒரு சில மணிநேர இடைவெளியில் 2 தோழிகள் தற்கொலை
Published on

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் ஹடாப்சர் பகுதியில் ஒரே கட்டிடத்தில் 19 வயதுடைய 2 தோழிகள் வசித்து வந்துள்ளனர். சிறு வயது முதலே அவர்கள் இருவரும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை மாலை 6.30 மணியளவில் தோழிகளில் ஒருவர் படுக்கையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் கோகுலே உடலை ஆம்புலன்சில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, 4 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் முகப்பு பகுதியில் இருந்து இரவு 7.30 மணியளவில் மற்றொரு தோழி கீழே குதித்து தற்கொலை செய்து உள்ளார். இவர்களில் ஒருவர் வர்த்தக படிப்பும் மற்றொரு தோழி அனிமேஷன் பாடமும் படித்து வந்துள்ளனர்.

அவர்கள் இருந்த அறையில் எந்தவித குறிப்புகளும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களும் தெரிய வரவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.

ஒரு சில மணிநேர இடைவெளியில், சிறுவயது முதலே தோழிகளாக இருந்த 2 தோழிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com