

புனே,
மராட்டியத்தின் புனே நகரில் எரவாடா சாஸ்திரி நகர் பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதில், தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கட்டுமான நிலையில் இருந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து புனே நகர தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள தொழிலாளர்கள் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.