மராட்டியம்: புதிதாக 5 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி

மும்பையில் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை, தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,091 ஆக உள்ளது.
புனே,
மராட்டியத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவற்றில் மும்பையில் 4 பேருக்கும், சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால், கடந்த ஜனவரியில் இருந்து மராட்டியத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,745 ஆக உயர்ந்து உள்ளது என பொது சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இதேபோன்று, மும்பையில் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை, தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,091 ஆக உள்ளது.
இதுவரை மொத்தம் 43 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 42 பேருக்கு இணை நோய்கள் இருந்துள்ளன. ஒருவருக்கு வேறு சில நோய்களும் இருந்துள்ளன என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story






