மராட்டியம்: மர்ம நோய்க்கு 7 பேர் பலி; 167 பேருக்கு பாதிப்பு

மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் மர்ம நோய் பாதிப்புக்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Courtesy:  PTI photo
Courtesy:  PTI photo
Published on

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் ஜி.பி.எஸ். எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் எனப்படும் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இதுபற்றி மராட்டிய சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் 192 பேருக்கு பாதிப்புக்கான சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இதுவரை 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த மர்ம வியாதிக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இந்த ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் நிலையும் சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 48 நோயாளிகள் ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு உள்ளனர். 21 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 91 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாசுபட்ட தண்ணீரால் இந்த மர்ம நோய், பாதிப்பு ஏற்படுத்தி நோயாளிகளை பலவீனப்படுத்துகிறது என கூறப்படுகிறது.

இதனால், நரம்பு மண்டலம் பாதிக்க தொடங்கி, தசை பலவீனம் மற்றும் முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் ஏற்படுகின்றன. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com