

மும்பை,
மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் உல்லாஸ்நகரில் நேரு சவுக் என்ற பகுதியில் அமைந்த 5 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி 5வது தளத்தில் இருந்து தரைத்தளம் வரை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் 7 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரியவரவில்லை. நான்கைந்து பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதே உல்லாஸ்நகரில் கடந்த 15ந்தேதி இதேபோன்று குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.