மராட்டியம்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து: 9 பேர் காயம்

மராட்டிய மாநிலத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
மராட்டியம்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து: 9 பேர் காயம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் கிழக்கு பந்த்ரா பகுதியில் 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டிட விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட ஒரு நபர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் நலமாக இருக்கின்றனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ ஷீசன் சித்திக், போலீசாருடன் விபத்து நடந்த பகுதியில் தான் இருப்பதாகவும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com