திருமணமானது தெரிந்ததும் உறவை முறித்த பெண்தோழி - சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர்

உத்தரபிரதேசத்தில் திருமணமான நபர் ஒருவர் திருமணமானது தெரிந்து பெண்தோழி உறவை முறித்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பல்லியா,

உத்தரபிரதேசத்தில் திருமணமான நபர் ஒருவர் திருமணமானது தெரிந்து பெண்தோழி உறவை முறித்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவைச் சேர்ந்த திருமணமான 32 வயது நபர் ஒருவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த அந்த பெண் உறவை தொடர மறுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. புதன்கிழமை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் மற்றும் பூச்சி மருந்து பாட்டில் ஒன்றும் மீட்கப்பட்டதாக துணைக் காவல் கண்காணிப்பாளர் முகமது ஃபஹீம் தெரிவித்தார்.

அந்த நபரின் மாமா அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பெண் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com